பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 நினைவும் அவர்பால் அதிகமில்லை. இவ்வாறு நினைப்பதற்கு ஒரு காரணமுண்டு. ஒரு பேரரசின் அமைச்சராக இருந்த ஒருவர் குதிரை வாங்கும் பணிக்கு ஏவுதற் கர்த்தாவாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி இயற்றுதல் கர்த்தாவாக இருந்து, தாமே புறப்பட்டுச் செல்வது தம்முடைய பதவிக்கு ஏற்றதன்று என்று அவர் நினைக்கவில்லை. இந்தச் செயலே தன்முனைப்பு அவர்பால் பெரிதாக இடம்பெறவில்லை என்பதைத் தெரிவிக்கின்றது. இவற்றையெல்லாம் மனத்துட் கொண்டு பார்த்தால் வேண்டி என்னைப் பணிகொண்டாய்” என்பதன் நுணுக்கம் நன்கு விளங்கும். வேறு வகையாகக் கூறுமிடத்து, தன்முனைப்பு மிக மிக இறைவன் எட்டிப் போய் விடுகிறான்; தன்முனைப்புக் குறையக் குறைய இறைவன் நெருங்கி வருகிறான் என்பதை உணரலாம். வேண்டும் என்ற இருவர்க்கும் அரியோன், எதனையும் வேண்டும் என்று விரும்பாத ஒருவருக்குத் தானே நெருங்கி வந்து, பிறர் காணமுடியாத திருவடியைத் தம் கையால் பிடிக்கவும், தலையால் சூடவும் அருள் செய்தான். இந்த இடத்தில் 499 ஆம் பாடலில் சீர் மறப்பித்து இவ் ஊனே புக எந்தனை நூக்கி’ என்று வரும் பகுதியை உடன்வைத்து எண்ணினால், வேண்டி என்னைப் பணி கொண்டாய் என்பதன் பொருள் நன்கு விளங்கும். அடுத்துள்ள பகுதியில் இரண்டு அருங் கருத்துக்களைப் பேசுகிறார். அடிகளார், முதலாவது, வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால்' என்பதாகும். அதாவது எந்த ஒன்றை எனக்குத் தரவேண்டும் என்று நீ