பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 குருநாதரைச் சார்ந்ததாகும். ஆகவேதான், 'நன்றே செய்வாய் பிழை செய்வாய்” நான் இதற்குத் தலைவனல்லன் என்கிறார் அடிகளார். இப்பாடலின் பொருளை இம்முறையில் விளங்கிக் கொள்ள, உலக வழக்கில் இன்று நடைமுறையில் உள்ள ஓர் உதாரணத்தை அறிந்துகொள்வது நலம். மாடு விற்க வருபவர், விலை முதலியவற்றைப் பேசி முடித்தவுடன் ஒரு காரியத்தைச் செய்வார். விற்பவர் மாட்டின் இடப்புறம் நின்றுகொள்வார். வாங்குபவர் வலப்புறம் நின்றுகொள்வார். விற்பவர், மாட்டின் மூக்குக் கயிற்றை மாட்டின் முதுகு வழியாக, வாங்குவோரிடம் கொடுத்துவிடுவார். வாங்குபவர் அந்தக் கயிற்றைக் கையில் பெற்ற விநாடிமுதல் மாடு அவருக்குச் சொந்தமாகிவிடும். அடுத்த விநாடியே அந்த மாடு கீழே விழுந்து இறந்துவிட்டால்கூட அந்த நஷ்டம் வாங்கியவரையே சாரும். இது தமிழ்நாட்டு மரபு. + குதிரைகளை விற்க வந்த குதிரைச் சேவகன், குதிரையின் சேணைக்கயிற்றை, வலப்புறம் இருந்த பாண்டியனிடம் குதிரையின் முதுகின் வழியாகக் கொடுத்துவிட்டான். இதனைக் 'கயிறுமாறிய படலம் என முன்னோர் கூறினர். அந்த விநாடியிலிருந்து குதிரைகளின் சாவும் வாழ்வும் பாண்டியனைச் சேர்ந்ததே தவிர, விற்றவனைக் கேட்க உரிமையில்லை. அப்படிக் கயிறு மாற்றிய குதிரைச் சேவகன், திருவாதவூரரிடம் தந்த பொன்னிற்குப் பதிலாக இந்தக் குதிரைகள் விற்கப்பட்டன என்று கூறிவிட்டான்; பாண்டியனும் அதனை ஏற்றுக்கொண்டான். மறுநாள் பரிகள் நரிகளாயின என்றால், அதற்குப் பொறுப்புப் பாண்டியனே தவிர, குதிரைச் சேவகனோ, திருவாதவூரரோ அல்லர்.