பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 213 குருநாதரால் எடுத்துக்கொள்ளப்பெற்றன. இதனையே அடிகளார் ‘என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ?” என்று இப்பாடலிலும் தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை (திருவாச:397) என்று பிறிதோர் இடத்திலும் பாடியுள்ளமையால் அறியலாம். r இவருடைய விருப்பத்தை அறிந்துகொள்ள ஒரு சொல்லைக்கூடச் சொல்லாமல் உடல், பொருள், ஆவி மூன்றையும் குருநாதர் எடுத்துக் கொண்டார் என்றால், மணிவாசகர் என்ற பெயருக்குரிய, தற்போதத்தோடு கூடிய ஒருவர், அங்கு இல்லை என்பதுதானே பொருள்? எனவேதான், ‘இன்று ஒர் இடையூறு எனக்குண்டோ? என்று பேசுகின்றார். தன் பரிசு, வினை இரண்டு, சாரும் மலம் மூன்றோடு இருந்த திருவாதவூரரைத் தம் திருவடிகளில் இணைத்துக் கொண்டு, அவரை மணிவாசகராக மாற்றினார் குருநாதர். இந்நிலையில் திருவாதவூரரிடம் இருந்த தன் பரிசு, இரு வினை, மும் மலம் ஆகியவற்றைத் தாங்கி, ஏற்று, அவற்றை அழிக்கும் கடமை குருநாதரிடம் வந்துவிட்டது. ஒரே விநாடியில் குருநாதர் இவற்றைச் செய்துவிட்டார். இது இயலுமா என்று வினவுவார்க்கு விடை கூறுவார்போல, அந்தக் குருநாதர் எட்டுத் தோள்களும், மூன்று கண்களும் உடையவர் என்கிறார். இரண்டு தோள்களையுடைய திருவாதவூரர் இதுவரைக்கும் சுமந்த வினை, மலம் ஆகியவற்றை எட்டுத் தோள்களையும், நெற்றிக்கண்ணையும் உடைய ஒருவர் எடுத்துச் சாம்பலாக்குவது எளிது என்பதைக் குறிக்கவே எண்தோள் முக்கண் எம்மானே’ என்றார். உடல், பொருள், ஆவி மூன்றும் எடுத்துக் கொள்ளப் பெற்ற பிறகு, அந்த உடலுக்கும் ஆவிக்கும் நல்லது கெட்டது எது நேர்ந்தாலும் அதற்குப் பொறுப்பு