பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 217 மேற்கொள்ளத் தொடங்கினால், என் அடிமைத் தன்மை மிக அழகானது அல்லவா’ என்றவாறு. - இந்த மூன்று பாடல்களிலும் ஒரே கருத்து, பன்னிப் பேசப்பெறுகிறது. இதுவரை, எப்படியாவது இந்த உலகை விட்டுவிட்டு அவன் திருவடியைச் சென்றடைய, இந்த உடலை அவன் போக்கவேண்டும் எனப் பாடிவந்துள்ளார் அல்லவா? இறையனுபவம் மிக மிக, தற்போதம் அழிய அழிய, இறைப்பிரேமையில் மூழ்கிவிட்ட நிலையில், இந்த உடம்பை எடுத்துக்கொள் என்று கேட்பதுகூட ஒர் அடிமைக்கு உகந்ததன்று என்ற எண்ணம் வலுவாகப் புகுந்துவிடுகிறது. அதன் பயனாகவே இந்த மூன்று பாடல்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. 505. அழகே புரிந்திட்டு அடி நாயேன் அரற்றுகின்றேன் உடையானே திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதம் எனக்குப் புராண நீ தந்தருளாதே குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே 10 முந்தைய பாடல்களைப்போல் இந்தப் பாடலிலும் திருப்பெருந்துறை நிகழ்ச்சி நினைவுகூரப்படுகிறது. 'உடையானே! திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்; (அப்படியிருந்தும்) அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகின்றேன். 'நாம, ரூபம் கடந்த பரம்பொருளாகிய நீ என்பொருட்டு, அழகிய மானுட வடிவு தாங்கி (திகழா நின்ற திருமேனி காட்டி) என்னை ஆட்கொண்டாய். உன் திருமேனியைக் கண்டும், உன் திருவடி சம்பந்தம் பெற்றும் fiftāIV is