பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 திருந்தாத நாயேனாகிய நான், அழகல்லாத செயல்களைச் செய்துவிட்டு இப்பொழுது அதன் விளைவாக என் இழப்பை-குருநாதரையும் அடியார்களையும் இழந்தமையை) -எண்ணி அரற்றித் திரிகின்றேன்’ என்றவாறு. புராண குழகா கோனே! கோல மறையோனே! எனக்குப் புகழே பெரிய பதந்தந்து அருளாதே நீ என்னைக் குழைத்தாயே இது சரியோ) என்றவாறு. தரிசனமும் திருவடி தீட்சையும் தந்த குருநாதர் அடுத்துச் செய்யவேண்டிய செயலைச் செய்யாமல் இடையே விட்டுப்போனது முறையோ என்கிறார். அதாவது, திருவடி சம்பந்தம் பெற்றவர்கள் உடனே பெறவேண்டியது, புகழோடு கூடிய பெரும்பதமாகிய சிவலோகம். அதனைத் தராத குருநாதர் மேலும் ஒரு செயலைச் செய்துவிட்டார் என்று நொந்துகொள்கிறார். அதாவது திருவடி சம்பந்தம் பெற்ற பிறகும் அடிகளாரின் உள்ளத்தில் தெளிவு பிறக்காமல் குழம்புமாறு செய்தார் என்கிறார். மேலே உள்ள நான்கு பாடல்களிலும், இருக்கும் இடம் தேடி வந்து அருள் செய்த குருநாதர், அதன் பயனை முழுவதுமாக அடிகளார் பெறாமல் செய்ததுடன் குழப்பம் நீடிக்குமாறும் செய்துவிட்டார் என்ற வருத்தமே பெரிதாகப் பேசப்பெறுகிறது. -