பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. உயிருண்ணிப் பத்து (சிவானந்தம் மேலிடுதல்) உயிருண்ணிப் பத்து என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பத்துப் பாடல்களிலும் இந்தச் சொல் இடம்பெறவில்லை. எனவே, பிற்காலத்தார் அவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த தலைப்பு என்று கொள்வதில் தவறில்லை. உண் என்ற பகுதி கால இடைநிலைகளோடு சேர்ந்து, அன் விகுதி பெற்று, உண்டனன். உண்பவன் என வருவதுபோல இங்கும் இகர விகுதி பெற்று உண்ணி என்று வந்துள்ளது. இங்கே உண்ணுதல் என்பது தன்வயமாக்குதல் என்ற பொருளைத் தரும். திருவருள் தனியேயும், உயிர் தனியேயும் நின்ற நிலை போக, திருவருள் உயிரைத் தன்வயப்படுத்தி ஆனந்தத்தால் நிரப்புதலின் உயிருண்ணி என்றார். ஒருவன் ஒரு பொருளை உண்டான் என்றால், உண்ணப்பட்ட சில நேரம்வரை உண்டவனின் உள்ளே சென்ற உணவு தனித்தே நிற்கும். பின்னர் அந்த உணவு தன்னிலை மாறிக் குருதியில் கலந்துவிடுகிறது. அதேபோலத் திருவருளால் உண்ணப்பெற்ற உயிர், உண்ணப்படும்வரை தன் தனிநிலையில் நின்று, பின்னர்த் திருவருளில் மூழ்கிய நிலையில் தற்போதத்தை இழந்துவிடுகிறது. அப்படி இழந்துவிட்ட நிலையில் மிஞ்சுவது ஆனந்தம் ஒன்றேயாம். அடிகளாரின் ஆன்மாவை உண்டு, தன்வயப்படுத்திக் கொண்டு, ஆனந்தத்துள் அமிழ்த்திக் கரையுமாறு செய்து விட்டபின் அங்கே உயிரை உண்ட திருவருள்மட்டுந்தான்