பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 எஞ்சி நிற்கிறது. எனவே, அதனை உயிருண்ணி என்று பெயரிட்டனர்போலும். எவ்வளவு சிந்தித்தாலும் இப்படி ஒரு தலைப்பைக் தர இப்பாடல்களில் எப்பகுதியும் இடந்தரவில்லை. இதற்குச், 'சிவானந்தம் மேலிடுதல்’ என்று உட்தலைப்புத் தந்துள்ளனர். பதிகத்தின் தலைப்பு, சிவானந்தத்தைத் தந்தவனை (உயிருண்ணியை)ப்பற்றிச் சொல்லுகிறது. பதிகத்தின் உட்தலைப்பு, சிவானந்தம் மேலிடுதலாகிய செயலைக் குறிப்பிடுகின்றது. ஆழ்ந்து சிந்தித்தால் இந்த இரண்டு தலைப்புகளுமே பொருந்துவதாகத் தெரியவில்லை. 506. பைந் நாப் பட அரவு ஏர் அல்குல் உமை பாகம் அது ஆய் என் மெய்ந்நாள் தொறும் பிரியா வினைக் கேடா விடைப்பாகா செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய் எந் நாள் களித்து எந் நாள் இறுமாக்கேன் இனி யானே 'உமையைப் பாகத்தேயுடைய விடைப்பாகனே! வினைக்கேடனே! திருப்பெருந்துறையில் என் உடலினுள்ளும் புகுந்து, அற்புதமான அமுத தாரைகள் ஏற்றுவதற்காக என் பழவினையைப் பொடிசெய்தவனே! செம்மையான நாவினையுடைய அடியார்கள், நாளும் வழிபடும் திருப்பெருந்துறையை உறைவிடமாகக் கொண்டவனே! ஐயா! எனக்குத் திருவடி தீட்சை செய்து, என் உடலினுள்ளும் புகுந்து இன்ப ஊற்றைப் பெருக்கினாயே! அந்த விநாடியே என் வினையைப் பொடி செய்தாயே! அப்படியிருந்தும் அன்று கிடைத்த களிப்பும் அடியாரிடையே இருக்கும் இறுமாப்பும் இனி மறுபடியும் எப்பொழுது கிடைக்கும்?' என்கிறார்.