பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிருண்ணிப் பத்து 223 துய்த்தார்களே தவிர, திருப்பெருந்துறை உறைபவரை அறிந்ததுமில்லை; கண்டதுமில்லை. அவர்களால் அறியப் படாத அப்பெருமான் உடல் புகுதல், உயிர் கலத்தல், உளம் பிரியாதிருத்தல் என்ற மூன்று வளங்களையும் எனக்கே தந்தான். தந்தான் என்றா கூறினேன்? அவன் தருவதற்கு என்பால் எத்தகுதி இருந்தது? உண்மையில் மூன்று வளங்களையும் தந்தான் என்று சொல்வது சரியில்லை, ஈந்தான் என்பதே முறையாகும் என்கிறார். ஈதல் என்பது உயர்ந்தோர் தாழ்ந்தோருக்குத் தகுதிபாராமல் வழங்குவதாகும். 508. எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன் மன வாசகம் கடந்தான் எனை மத்த உன்மத்தன் ஆக்கிச் சின மால் விடை உடையான் மன்னு திருப் பெருந்துறை உறையும் பனவன் எனைச் செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே 3 இப்பாடலில் வரும் மத்த உன்மத்தன் ஆக்கி’ என்ற தொடரைக் கவனமாகச் சிந்தித்துப் பொருள்கொள்ள வேண்டும். மத்த உன்மத்தம் என்ற தொடருக்குப் பெரும் பைத்தியம் என்றே பலரும் உரை கூறியுள்ளனர். பைத்தியங்களுக்கும் எந்நேரமும் தெய்விக ஆனந்தத்தில் மூழ்கித் திளைக்கும் அடியார்களுக்கும், சில ஒற்றுமைகளும் சில முக்கியமான வேற்றுமைகளும் உண்டு. ஆடிப் பாடித் திரிதல், உடம்பில் மானத்தைக் காக்கும் துணி இருக்கிறதா இல்லையா என்று கவலைப்படா திருத்தல், இதைத்தான் உண்ணவேண்டும் இதை உண்ணக்கூடாது என்று வேறுபாடு தெரியாதிருத்தல் ஆகியவை இவ்விரு சாராரிடையே உள்ள பொதுத்தன்மை யாகும.