பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வேற்றுமை என்று எடுத்துக்கொண்டால், மிக நுண்மையானதும் ஆழமானதுமாகிய ஒரு வேற்றுமையை அறிதல் வேண்டும். தான்’ என்ற நினைவு ( - Consciousness) எந்த நிலையிலும் பைத்தியங்களுக்கு இருந்தே தீரும். அது வெளிப்படையாகத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் பைத்தியங்களின் ஆழ்மனத்தில் தான்' என்ற உணர்வு இருந்தே தீரும். இதன் எதிராக, அடிகளார்போன்ற தெய்விகப் பித்துப் பிடித்தவர்களின் ஆழ்மனத்தில், அதற்கும் அடியிலுள்ள ஆழ்சித்தத்தில் நான்’ என்ற உணர்வு தொழிற்படாமல் செயலிழந்து கிடக்கும். வேறு வகையாகக் கூறவேண்டு மானால், இவர்களுள்ளே பொங்கிவழியும் இறையனுபவம் என்ற ஆனந்தத்தின் உள்ளே, இவர்களுடைய நான்’ ஆழமாக மூழ்கிக் கரைந்துவிடும். - மேலே கூறிய இரண்டு நிலைகளில் அடிகளார் அடைந்த நிலை எது என்பதை அறிந்துகொள்ள அவரே விளக்கம் தருகிறார். அறியாமை நிரம்பிய பொதுமக்கள் அடிகளார் அடைந்த இம்மாற்றத்தை அறிந்துகொள்ளாமல் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடினர். பித்தன் என்று எனை உலகவர் பேசுவது ஒர் காரணம் இது கேளிர் (திருவாச43) என்றும், நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப (திருவாச 20 என்றும் அவரே கூறியிருத்தலின் இவ்விரு சாராரிடையே உள்ள வேற்றுமையைச் சாதாரண மக்கள் அன்றும் அறிந்திலர்; இன்றும் அறிந்திலர். பைத்தியங்கட்கும் இறைப்பிரேமையில் திளைப்பவர் கட்கும் உள்ள மிகப் பெரிய வேற்றுமை நான் என்ற எண்ணம் இருத்தலும் இல்லாமையுமே என்று முன்னர்க் கூறியுள்ளோம். அடிளாருக்கு நான்’ என்ற உணர்வு அடித்தளத்தில் இருந்ததா, இல்லையா என்பதை அறியவேண்டுமாயின் எனை நான் என்பது அறியேன்”