பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிருண்ணிப் பத்து 225 என்ற அவருடைய பாட்டின் தொடர் அதற்கு விடையளிக்கிறது. திருப்பெருந்துறையில் குருநாதரின் திருவடிகளில் விழுகின்ற அந்த விநாடிவரை, திருவாதவூரர் என்ற தனிமனிதர், பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த ஒருவர், தாம் யார் என்பதையும், தம் அதிகாரம் என்ன என்பதையும், நன்கு அறிந்திருந்தார். அதாவது, எனை நான் என்பதை நன்கு அறிந்திருந்தார். அன்றியும் இந்த 'நான் உணர்வு வலுவாக இருந்தமையின் பொறிபுலன்கள் சிறப்பாகத் தொழிற்பட்டன. எனவே, பொருள்களின் இடையேயுள்ள வேறுபாடு, பகல்-இரவு வேறுபாட்டைப் போல் நன்கு அறியத் தக்கதாக இருந்தது. இப்படி இருந்த திருவாதவூரரை மத்த உன்மத்தன்' ஆக்கினார் ஒருவர். உன்மத்தம் என்பது சாதாரண பைத்தியத்தைக் குறிக்கும். மத்த உன்மத்தம் என்பது இந்தச் சாதாரண பைத்தியங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ள ஒரு நிலையைக் இறைப்பிரேமை) குறிக்கும். இந்த நிலையை அடையுமாறு ஆக்கினார் என்று அடிகளார் கூறுவதால் யார் ஆக்கினார் என்ற வினாத் தோன்றுமன்றோ? அதற்கு விடையாக மன வாசகம் கடந்தான் என்று கூறுகிறார். மன வாசகம் கடந்த ஒருவரை எவ்வாறு அறிவது? நுண்மையான மனத்திற்கும் நுண்மையான சொல்லிற்கும் அப்பாற்பட்டு நிற்கின்ற ஒருவரை எவ்வாறு அடையாளம் கண்டு கூறுவது? அதற்கும் ஒரு வழி கூறுகின்றார் அடிகளார். Ls)GỒf வாசகம் கடந்தல் அவருடைய நுண்மையான நிலை. இந்த நுண்மைக்கு எதிராக, பருமையான ஒரு நிலையும் உண்டு. அந்த நிலைதான். 'சின மால் விடை உடையான்' என்ற நிலை, அந்தப் பருமையான வடிவு எங்கே இருக்கிறது?