பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'மன்னு திருப்பெருந்துறை என்று கூறியதால் அந்தத் திருப்பெருந்துறையில் பணவனாக. (அந்தண வடிவில்)குருநாதர் வடிவில் பருப்பொருளாக நின்று ஆண்டு கொண்டவரே "சினமால் விடை உடையான்’ என்றும் 'மனவாசகங் கடந்தான்’ என்றும், அவரே தம்மை உன்மத்தன் ஆக்கினார் என்றும் மிக அழகாக மூன்று தொடர்களில் அடிகளார் விளக்கியுள்ளார். திருவாதவூரராகவும் அமைச்சராகவும் இருந்த தம்மை மத்த் உன்மத்தன் ஆக்கினார் என்பதை அடிகளார் எவ்வாறு கண்டுகொண்டார்? அது மிக எளிதாக நடைபெற்றது என்கிறார். அதாவது, திருப்பெருந்துறை அனுபவத்திற்கு முன்னர்த் தம்மை யார் என்றும், தமது அதிகாரம் என்ன என்றும் அறிந்திருந்த திருவாதவூரர், இப்பொழுது எனை நான் என்பதை அறியாத மணிவாசகராக ஆகிவிட்டார். பகல் இரவாவதும் அறியேன்” என்ற தொடர் ஒளி-இருள் என்ற பொருளைத் தருவதோடு நில்லாமல், பொருள்களின் வேறுபாட்டைக் குறிக்கும் தொடராகவும் அமைந்தது. திருப்பெருந்துறை அனுபவத்திற்குப் பின்னர் நான்’ என்பது மறைந்ததுபோல, ஒளி-இருள், பெரியது.சிறியது, நல்லது-கெட்டது என்ற எந்த வேறுபாடும் தெரியாமல் போய்விட்டது என்கிறார். 'பனவன் எனைச் செய்த படிறு அறியேன்” என்பது இறுதி அடியாகும். படிறு என்ற சொல்லுக்கு வஞ்சனை, குறும்பு என்ற பொருள்கள் உண்டு. வஞ்சனை என்ற பொருளை வைத்துக்கொண்டு பார்த்தால், அச்சொல் இந்த இடத்தில் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம். பனவன் என்பது அந்தணன் என்ற பொருளை உடையது. அந்தணன் என்பவன் யார்? எளிமை, அறிவுடமை, கல்வி முதலியவற்றோடு பிறரை அடிமைப்படுத்த விரும்பாமல் அவர்கட்கு நன்மை செய்ய முயல்பவனே அந்தணன் ஆவான். ஆனால்