பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிருண்ணிப் பத்து 227 திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் பணவன் வடிவில் இருந்த குருநாதர் என்ன செய்தார் தெரியுமா? நூற்றுக் கணக்கான பரிவாரங்கள் புடைசூழ, மிக்க பெரு மிதத்தோடு வழியோடு சென்ற ஓர் அமைச்சரைப் பிடித்து ஆண்டியாக்கினார்; மத்த உன்மத்தன் ஆக்கினார் என்றால் அந்தப் பனவன் செயலை வஞ்சனை என்று கூறுவதில் என்ன தவறு உளது: 'படிறு’ என்ற சொல்லுக்குக் குறும்புத்தனம் என்ற பொருளை வைத்துக்கொண்டாலும், எவ்விதமான பிரதிபலனையும் கருதாமல், தான் செய்கின்ற செயலால் பிறர் வருந்துவார்களா, இல்லையா என்பதுபற்றியும் கவலைப்படாமல் செய்யப்பெறும் விளையாட்டே குறும்புத்தனம் என்று சொல்லப்படும். குருந்த மரத்தடிப் பனவன் அமைச்சரை ஆண்டியாக்கியதால் அப்பனவனுக்கு என்ன லாபம்? எனவே, எவ்விதப் பயனும் கருதாமல், விளையாட்டாக இதனைச் செய்தார் ஆகையால், குறும்புத்தனம் என்று கூறுவதிலும் தவறில்லை. 509. வினைக் கேடரும் உளரோ பிறர் சொல்லீர் வியன் உலகில் எனைத் தாண் புகுந்து ஆண்டான் எனது என்பின் புரை உருக்கிப் பினைத்தான் புகுந்து எல்லே பெருந்துறையில் உறை பெம்மான் மனத்தான் கண்ணின் அகத்தான் மறுமாற்றத்திடையானே w 4 'திருப்பெருந்துறை உறை பெம்மான் ஆகிய குருநாதர் என்னினும் வேறாக, நான் கண்டு வணங்கத்தக்க பொருளாகப் புறத்தே இருப்பவர் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஆனால், அவர் என்ன செய்தார் தெரியுமா? திருப்பெருந்துறையில் கண்டபொழுது முதன்முதலாக என்ன செய்தார்? என்னுள் புகுந்து