பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'பிறவிதோறும் தொடர்ந்து வருகின்ற மும்மலம், அதன் பயனாக உள்ள கலக்கம் ஆகியவை இப்பிறவியிலும் கடல் அலைபோல் மறித்து மறித்து என்மாட்டு வந்து என்னை உருக் குலையச் செய்தன. திருப்பெருந்துறை நாயகன் செய்த முதற்செயல், இந்தக் கலக்கம், அதன் மூலமாகிய மலம் என்பவற்றை அறுத்ததாகும். - 'அடுத்தபடியாக, அவன் செய்தது, என் உடல், உயிர் என்ற இரண்டிலும் புகுந்து எங்கோ ஒர் மூலையில் தங்கிவிடாமல் உடல், உயிர் இரண்டிலும் இடைவெளியின்றி நிறைந்ததாகும். 512. வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப்பு இறப்புச் சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம்போகல் ஒட்டேனே 7 புகழ், செல்வம், மண், விண், பிறப்பு, இறப்பு ஆகிய யாதொன்றையும் நான் இப்பொழுது வேண்டவில்லை. இவ்வாறு கூறுவதால் அடிகளார் அடைந்த வளர்ச்சியை நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. இறை நினைவு இல்லாதவர்களுடைய உறவை மனத்தினாலும் நாட் மாட்டேன். திருப்பெருந்துறையில் நிலைபெற்ற குருநாதர் திருவடிகளைச் சென்று சேர்ந்துவிட்டேன். இனி அத்திருவடிகளிலிருந்து எந்த நிலையிலும் பிரிந்துபோக மாட்டேன். அவ்வாறு பிரிவதற்கு மூல காரணமாய் அமைந்துள்ள செல்வம், புகழ், கல்வி முதலியவற்றைத் துறந்துவிட்டேன் ஆதலின் அவன் திருவடிகளைவிட்டுப் புறத்தே செல்லமாட்டேன்.