பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிருண்ணிப் பத்து 233 ஈர்க்கும் ஆற்றலுடையது. இதனால்தான், பற்றை விட்டவர்களையும் இந்த அடியார் கூட்டத்தில் சேரவேண்டுமென்று அடிகளார் அழைக்கின்றார்.

இந்த இடத்தில் திருக்குறளில் துறவின் பின் அமைந்துள்ள அவா அறுத்தல் என்ற அதிகாரத்திற்குப் பரிமேலழகர் கூறும் முன்னுரையைக் கவனத்தில் கொள்வது நலம்.

அடியார் கூட்டத்தினிடையே இருப்பதன் பேராற்றலை வள்ளுவன் கண்டு கூறுவதற்கு ஐந்நூறு ஆண்டுகள் முன்னரே, புத்த தேவன் இதனை நன்கு அறிந்து சங்கம் சரணம் கச்சாமி என்று மந்திரமாகவே ஆக்கிச் சென்றான். இதனைத்தான் அடிகளார் கற்றாங்கு அவன் கழல் பேணினரொடும் கலந்தே கூடுமின்’ என்று அருளிச் செய்தார்.

தாயுமானவப் பெருந்தகையும் ‘தொண்டரொடு கூட்டுகண்டாய்' என்றும், பட்டினத்துப் பிள்ளை நல்லார் இணக்கமும் நின் பூசை நேசமும் என்றும் பாடுவது மேற்கூறிய கருத்தை வலியுறுத்துவனவாகும்.

511. கடலின் திரை அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என் உடலும் எனது உயிரும் புகுந்து ஒழியாவணம் நிறைந்தான் சுடரும் சுடர் மதி சூடிய திருப்பெருந்துறை உறையும் படரும் சடை மகுடத்து எங்கள் பரன் தான் செய்த படிறே 6

'பிறை சூடியவனும், திருப்பெருந்துறையில் உறைகின்றவனும், சடையையே மகுடமாக உடையவனு மாகிய எங்கள் பரன், பிறர் அறியாவண்ணம் எனக்குச் செய்த செயல்கள் என்ன தெரியுமா? 配a虫rv1s