பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பொருளைப் பற்றிக்கொண்டு ஏனைய பற்றுக்களை நீக்கி விட்டோம் என்ற உறுதிப்பாட்டோடு நிற்கின்றவர்களுக்கும் ஓர் ஆபத்து உண்டு. அந்த ஆபத்து என்ன என்று தெரிந்துகொண்டு, அதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள முயலாதவர்களைக் கெடுவீர் என்று அழைக்கிறார் அடிகளார். பற்றை அறுத்துக்கொண்டு, எவ்வளவு உயர்ந்த நிலை அடைந்தவர்களும் தம்மை ஒத்தவரிடையே சதா காலமும் கூடி உள்ளங்கலந்து வாழாமல், தனித்து நிற்பார்களே ஆயின், மனக் குரங்கு காரணமாக, விரைவில் தாம் இருக்கும் நிலையிலிருந்து கீழே வீழ்தல் உறுதி. இதுபற்றிச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். நல்ல நிலைபேறுடைய கதியை அடையவேண்டுமானால் இனி சொல்லப்போகும் இது ஒன்றே வழியாகும். அந்த ஒன்று எது தெரியுமா? 'பின்னப்பட்ட சடாபாரத்தை உடையவனும், திருப்பெருந்துறைக்கு இறைவனுமாகிய பெருமானின் சிறப்புக்களைக் கற்றறிந்து, அந்தக் கல்வியின் பயனாக அவன் கழலைப் பேணுகின்ற அடியார்களின் கூட்டத்தோடு ஒன்றுகலந்து கூடுவீர்கள்ாக! இதுவே முன்னர்ச்சொல்லிய வழியாகும். ஒரே வகை எண்ணத்தில் ஈடுபட்டு, நல்வழியைப் பின்பற்றும் மக்கள் பலரும் ஒன்றுகூடி இருப்பதில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அனைவரும் பண்பட்ட அடியார்கள் ஆதலின், எந்நேரமும் இறைவன்பற்றிய நினைவு, பேச்சு, செயல் ஆகியவை அவரிடையே நடைபெறும். தனி ஒருவனுடைய மனம் வேறு வழியில் செல்ல முயன்றாலும் அவன் சேர்ந்திருக்கும் கூட்டத்தாரின் ஒருமித்த மன ஆற்றல் இந்தத் தனிப்பட்டவனின் மனத்தை