பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிருண்ணிப் பத்து 231 மனத்தின் இயல்பை இற்றையநாள் மனவியலார் ஆய்ந்து தெளிவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே நம் முன்னோர் அதன் இயல்பை நன்கு அறிந்திருந்தனர். மெஸ்மெரிஸம், ஹிப்னாடிஸம் என்பவற்றைப் பழகுபவர்கள் மனத்தை ஒருநிலைப்படுத்த முதலில் பழகுகின்றனர். தியானத்தில் ஈடுபடுபவர்களும் இதே செயலைச் செய்கின்றனர். இருவரும் இரு வேறு வழிகளைக் கையாள்கின்றனர். ஒற்றை விளக்கை வைத்துக்கொண்டு அதன் சுடரையே பார்த்துப் பழகுதல், வெள்ளைத் துணியின் நடுவே ஒரு கரும்புள்ளியை வைத்து அதனையே பார்த்துக் கொண்டிருத்தல் ஆகிய முறைகள் மனவியலார் மனத்தை ஒருவழிப்படுத்த மேற்கொள்ளும் முறைகளாகும். தியானத்தில் ஈடுபடுபவர் குறுகிய சொல்லாலியன்ற ஒரு மந்திரத்தை விடாது மனத்தில் செபிக்கும் வழியைக் கையாள்கின்றனர். நாளாவட்டத்தில் இம்முறையில் மனம் ஒருநிலைப்பட்டு நிற்கும் என்பதில் ஐயமில்லை. அந்த நிலையிலுங்கூட, வேறொரு பணியில் மனத்தைச் செலுத்தாவிடினும், நீண்ட நேரம் இந்த ஒருநிலைப்பாடு நிற்பதில்லை, மனத்தின் தன்மை அதுதான். ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு நிற்குமே தவிர ஒன்றையும் பற்றாமல் நிற்குமென்று சொல்லமுடியாது. எனவேதான், அழியும் பொருள்களைப் பற்றிநிற்கும் மனத்தைப் பார்த்து, பற்றற்றானிடம் இறைவனிடம்) உன் பற்றை வைப்பாயேயானால் உன்பால் அமைதி நிலவும் என்றனர் நம்முன்னோர். பற்றும்பற்று ஆங்கு அதுபற்றி என்பது பற்றப்பட வேண்டியதாகலின் இறைவன் திருவடிகளைப் பற்றி அதன் மூலம் முன்னரே உம் மனத்தில் குடிகொண்டுள்ள பற்றுக்களை அறுத்தவர்களே! பற்றப்படவேண்டிய