பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மாற்றத்திலும், மறுமாற்றத்திலும் அவனே உள்ளான் என்று கூறியதால்-ஒன்றைக் கருத்தளவில் நினைந்து, சொல்லால் வெளிப்படுத்தினால் என்ன பயனைக் செய்யுமோ அதே LItLfడ336ff ஒன்றைக் கருத்தளவில் கொள்ளாமல் பிறர் கேட்ட வினாவிற்கு விடையாகக் கூறினும் அந்த விடைச் சொல் அருளாளர்கள் வாய்வழி வருவதால் அந்தச் சொல்லிலும் அவன் உள்ளான் என்று அடிகளார் கூறும்போது மிக நுணுக்கமான ஓர் உண்மையையும் இதனுள் பொதிந்து பேசுகின்றார். இப்பெருமக்கள் பேசும் சொற்களுக்குச் சாப, விமோசன ஆற்றல் உண்டு என்று பெரியோர்கள் சொல்வதன் அடிப்படையை இப்பொழுது புரிந்து கொள்ளலாம். இவர்கள் வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் உள்ளே இருக்கும் இறையுணர்விலிருந்து தோன்றுபவை ஆதலின், அவர்கள் கருதினாலும், கருதா விட்டாலும் அச்சொற்களுக்குச் சாப விமோசன ஆற்றல் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 50. பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்மின் தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர் கற்று ஆங்கு அவன் கழல் பேணினரொடும் கூடுமின் கலந்தே 5 இப்பாடலின் முதலிரண்டு அடிகள் 'பற்றுக பற்றற்றான் பற்றினை திருக்குறள்-350) என்ற திருக்குறளின் விரிவுரையாகும்.