பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 513. கோல் தேன் எனக்கு என்கோ குரை கடல்வாய் அமுது என்கோ ஆற்றேன் எங்கள் அரனே அருமருந்தே எனது அரசே சேற்று ஆர் வயல் புடை குழ்தரு திருப்பெருந்துறை உறையும நீற்று ஆர் தரு திருமேனி நின்மலனே உனை யானே 8 'திருப்பெருந்துறை உறையும் நீற்றார் திருமேனி நின்மலனே! நீ தரும் இன்பத்தை முழுவதுமாக அனுபவிக்கும் ஆற்றல் இல்லாதவனாய் இருக்கின்றேன் (ஆற்றேன்) என்றவாறு. 514. எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன் அச்சோ எங்கள் அரசே அருமருந்தே எனது அமுதே செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான் நிச்சம் என நெஞ்சில் மன்னி யான் ஆகி நின்றானே 9 இப்பாடலில் முதலடியில் மனித மனத்தின் ஒரு சிறப்பம்சம் பேசப்பெறுகிறது. 'அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பம் அற, பெறாதன விரும்பும் உயிர்கள்’ என்று 'சாந்தலிங்க சுவாமிகள் பாடியதை இங்கு நினைவுகூர்தல் நலம். 'எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை அறியேன்” என்ற பகுதி இரண்டாகப் பிரித்துப் பொருள் கொள்ளப்பட வேண்டும். 'எச்சம்’ என்பது இப்போது இல்லாமல், ஆனால் இருக்கவேண்டுமென்று நம்மால் விரும்பப்படும் பொருளாகும். திருப்பெருந்துறையில் கிடைத்த அனுபவம், அடியார் கூட்டம் என்பவை அப்போது இருந்து, இப்போது