பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிருண்ணிப் பத்து 237 இல்லாமல் போய்விட்டமையின் அவற்றையே நினைந்து வருந்தும் அடிகளார் ‘எச்சம் அறிவேன் நான் என்றார். அடுத்தபடியாக உள்ளது எனக்கு இருக்கின்றதை நான் அறியேன்” என்ற தொடராகும். இப்போது அடிகளாரிடம் என்ன இருக்கின்றது என்பதை அவரே பின் இரண்டு அடிகளில் கூறுகின்றார். செச்சை மலர் போன்ற மேனியனும் திருப்பெருந்துறை உறைபவனுமாகிய பெருமான் என்னுள் புகுந்து என்னினும் வேறாகத் தனித்து நில்லாமல், யான் என்பது இல்லாமல் அவனேயாகி நிலைபெற்றது நிற்பதை அந்தோ! (அச்சோ) நான் அறியாமல் இருந்துவிட்டேன்’ என்று வருந்துகின்றார். 515. வான் பாவிய உலகத்தவர் தவமே செய அவமே, ஊன் பாவிய உடலைச் சுமந்து அடவி மரம் ஆனேன் தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனல் ஆமே 10 'புண்ணியம் செய்து தேவர் உலகம் சென்று வாழ்கின்ற தேவர்களும் அவன் திருவடியை அடையத் தவம் செய்கின்றனர். யானோ இவை ஒன்றிலும் ஈடுபடாது நெருங்கிய காட்டினுள் இருக்கும் மரமாக வாழ்கின்றேன். 'அப்படியிருக்க, பாவியேனாகிய யான் எவ்வித முயற்சியும் செய்யாமல் இருந்துகொண்டே நீ உன் திருவடிகளைத் தரவில்லையென்று குறைகூறுவது முறையோ? என்றபடி, அடவி மரத்திற்கும் தனியே நிற்கும் மரத்திற்கும் சில வேறுபாடுகள் உண்டு. தனிமரமாக இருக்கும்போது, புறத்தே உள்ள வெயில், மழை முதலியவை அம்மரத்தின் பட்டுப்