பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பெரும்பயனை நல்கும். அன்றியும் நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து கூடுகட்டித் தன்பால் தங்க அம்மரம் உதவியளிக்கும். செறிந்து விளங்கும் காட்டிடை உள்ள மரத்திற்கு (அடவி மரத்திற்கு மேலே கூறிய எதுவும் இல்லை. அதாவது அடியார் கூட்டம் என்ற வெயிலும், இறையருள் என்ற மழையும் தமக்குக் கிடைக்கவில்லை என்பதால் தம்மை அடவி மரம் என்கிறார் அடிகளார். அன்றியும் சிற்றுயிர்கள் வந்து தங்குகின்ற வாய்ப்பும் அடவி மரத்திற்கு இல்லையாதலால், தன்னினும் கீழ்ப்பட்டவருக்கு ஏதாவதொரு உதவி செய்து அவர்கள் துயரைத் துடைக்கும் வாய்ப்பும் தமக்கில்லை என்பதையும் 'அடவிமரம்’ என்ற சொல்லால் குறித்தாராயிற்று. ওঁ ওঁ ওঁb