பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சப் பத்து 243 மற்றும் ஒர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே f புற்றிடத்து வாழும் அரவு, எந்த நேரத்தில் வெளிப்பட்டு எங்ங்ணம் தாக்கும் என்பதை அறியமுடியாது. ஆதலால், அதன்மாட்டு அச்சம் பிறந்தது. பொய் பேசுகின்றவர்கள் தம்முடைய சாமர்த்தியம் காரணமாக அதை மெய்போலச் சாதித்துப் பிறரை நம்புமாறு செய்து குழியில் வீழ்த்துவர். ஆதலின், 'பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் என்றார். 'கற்றை வார் சடை எம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி’ (அடைந்தும்கூட அதில் முழுநம்பிக்கை வைக்காமல்) மற்றோர் தெய்வம் உண்டு என அதுவரை கொண்டிருந்த நம்பிக்கையைப் போக்காதவர்களைக் (அற்றிலாதவர்) கண்டால் நாம் அஞ்சுகிறோம் என்றபடி இக்கருத்து அடிகளாரால் ‘மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது’ (திருவாச:474) என்றும் முன்னரும் பாடப்பெற்றுள்ளது 517. வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரால் மாறு காண - எம்பிரான் தம்பிரான் ஆம் திருஉரு அன்றி மற்று ஒர் தேவர் எத்தேவர் என்ன அருவராதவரைக் கண்டால்,அம்ம நாம் அஞ்சுமாறே 2