பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மனித மனத்திற்கு இயல்பாக உள்ள குணங்களில் பொருள்கள்மேல் பற்றுவைத்தலும் ஒன்றாகும். அந்த வேட்கையை வெல்லுதல் சாதாரண மக்களுக்கு எளிதன்று. அத்தகைய வேட்கைக்கும் அஞ்சமாட்டேன் என்கிறார். வேட்கை வந்தால் என்று கூறியமையின் அற்ப ஆசைகள் தம்மாட்டு வாரா என்றும், ஒருவேளை பெரியஆசை ஏதேனும் வந்தால் அதற்கும் அஞ்சமாட்டேன் என்றும் கூறுகிறார். பிராரத்துவம் என்ற வினை கடல்போலத் தம்மை மூழ்கடிப்பதாக இருப்பினும் அதற்கும் அஞ்சமாட்டேன் என்கிறார். தம்முள் மாறுபாடு கொண்ட இருவரால் அடி முடி காணமுடியாத எங்கள் பிரானும் எல்லோருக்கும் தலைவனுமாகிய தம்பிரானும் ஆவான் எங்கள் தலைவன். அவனுடைய திருவுருவைக் கண்டவர்கள் அதன்பின் வேறு தெய்வங்களின் வடிவைக் கண்டு, இவர்களும் ஒரு தேவரோ என்று எள்ளி (அருவருப்படையாதவரைக் கண்டால் தாம் அஞ்சவேண்டிவரும் என்கிறார். 518. வன் புலால் வேலும் அஞ்சேன் வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன் என்பு எலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருக மாட்டா அன்பு இலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 3 கொலை செய்கின்ற வேலுக்கும், மகளிர் கண்ணாகிய வேலுக்கும் அஞ்சேன் என்கிறார். எஞ்சிய மூன்று அடி களும் ஒரு புதிய எண்ண ஓட்டத்தை உண்டாக்குகின்றன.