பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சப் பத்து 245 அம்பலத்து ஆடுகின்ற என் பொ(ல்)லா மணியை என்பு எல்லாம் உருகும்படியாக நோக்கி, அவனை ஏத்தி, அவனது இன்னருளைப் பருகினேன். தில்லைக்கு வந்து அவனை நோக்கி ஏத்தி அவனது இனிய அருளைப் பருகமாட்டாதவரைக் கண்டால் அஞ்சுகிறேன் என்கிறார். இவ்வாறு அவர் கூறக் காரணம் உண்டு. அவர்கள் நோக்கினாலும், ஏத்தினாலும் ஏன் அவனுடைய இனிய அருளைப் பருகவில்லை? அதற்கும் ஒரு காரணம் உண்டு. தூய்மையான அன்பு அவர்கள்பால் இன்மையால் அருளும் வழங்கப்படவில்லை; அவர்கள் பருகவும் முடியவில்லை. இத்தகையவர்கள் தில்லைக் கூத்தனை நோக்கியது உண்மைதான். ஆனால், அந்த நோக்கில் என்பை உருக்குகின்ற தன்மை இல்லை. ஏன்? தூய்மையான அன்பு நிறைந்திருக்குமாயின் கூத்தனை நோக்கியவுடன் என்பு உருகியிருக்கும்; அவன் இன்னருள் சுரந்திருக்கும்; அதைப் பருகியுமிருக்கலாம். இவ்வாறு இல்லாதவர்களைக் கண்டால் அஞ்சுகிறேன் என்கிறார். 519. கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன் வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் துளி உலாம் கண்ணர் ஆகித் தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு அளி இலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 4 கிறி-வஞ்சனை இப்பாடலில் உள்ளன்பு நிறைந்த உள்ளத்தோடு வழிபாடு செய்கின்றவர்கள் செயன்முறை, பெறும் பயன் என்பவை விரிவாகப் பேசப்பெறுகின்றன.