பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வெண்மையான நீற்றைப் பூசி ஆடுகின்ற வேதியனாகிய தில்லைக் கூத்தனின் திருவடிகளை அடைந்து, கண்ணிர் துளிர்க்க, தொழுது, அழுது, உள்ளம் நெக்குருக வழிபாடு செய்யும் அன்பு நிரம்பாதவர்களைக் கண்டால் அஞ்சுகிறேன் என்கிறார். 520. பிணி எலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் துணி நிலா அணியினான்தன் தொழும்பரோடு அழுந்தி அம் மால் திணி நிலம் பிளந்தும் காணாச் சேவடி பரவி வெண் நீறு அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 5 துண்டிக்கப்பட்ட பிறைச்சந்திரனை அணிந்த தில்லைக் கூத்தனுடைய அடியார்கள் தம்மோடு பொருந்தி (அழுந்தி) நட்புக் கொண்டிருக்க வேண்டும். திருமாலானவன் நிலத்தைப் பிளந்து சென்றும் காணமுடியாத சேவடியைப் பரவவேண்டும். இவற்றோடு இறைச் சிந்தனையின் அடையாளமாக வெண்ணிறு அணிந்திருக்க வேண்டும். இம்மூன்று பண்புகளும் இல்லாதவரைக் கண்டால் அஞ்சுகிறேன் என்கிறார். மேலே கூறிய மூன்று செயல்களும், அதாவது அடியாரோடு அழுந்துதல், திருவடி பரவுதல், வெண்ணிறு அணிதல் ஆகிய மூன்றும், முறையே மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் இறையன்பு கொள்ளவேண்டும் என்பதைக் குறித்தனவாயின.