பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அச்சப் பத்து 247 521. வாள் உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன் தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல் பதம் கடந்த அப்பன் தாள தாமரைகள் ஏத்தித் தட மலர் புனைந்து நையும் ஆள் அலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 6 ஒளி பொருந்திய நெருப்பிற்கோ புரண்டு வரும் மலைக்கோ அஞ்சமாட்டேன் என்கிறார். திருத்தோள்களில் நீற்றை அணிந்தவனும், இடப வாகனத்தை உடையவனும், சொல்லையும் பொருளையும் கடந்து நிற்பவனுமாகிய நம் தந்தையினது தாமரை போன்ற திருவடிகளை ஏத்தி, நிறைந்த (தட) மலர்களை இட்டு வழிபடுகின்ற நேரத்தில் உள்ளம் நைந்து உருக வேண்டும். இத்தகைய நிலைக்கு ஆளாகாதவர்களைக் கண்டால் தமக்கு அச்சம் ஏற்படுகிறது என்கிறார். 522. தகைவு இலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகை முகந்து எளி கை வீசிப் பொலிந்த அம்பலத்துள் ஆடும் முகை நகைக் கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி அகம் நெகாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 7 நடுவுநிலைமை நீங்கிய, நீதியில்லாத பழிக்கு அஞ்ச மாட்டேன். அமைச்சராக இருந்த காலத்திலும் சாவைக் கண்டு அஞ்சவில்லை என்றும் கூறுகின்றார்.