பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. திருப்பாண்டிப் பதிகம் (சிவானந்த விளைவு) திருவாசகப் பதிகங்களுக்கு இதுவரை கொடுக்கப் பெற்றுள்ள தலைப்புக்கள்போல் அல்லாமல் இப்பதிகத் தலைப்பு புதுமையாக உள்ளது. புகார் நகரில் நடந்ததைக் கூறும் பகுதி, சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டம் என்று பெயர் பெற்றதைப்போல, பாண்டி நாட்டில் நடைபெற்ற செய்தியைக் கூறுகின்றது. ஆதலின் பாண்டிப் பதிகம் எனப் பிற்காலத்தார் பெயரிட்டனர் போலும். இதில் வரும் பல பாடல்களில் ஆலவாய்ச் சொக்கன் குதிரைச் சேவகனாக வந்த செய்தியே பெரிதும் பேசப் பெறுகிறது. ஆனால், இச் செய்தி புதுமையானதன்று. முன்னரே பல இடங்களில் இச்செய்தி அடிகளாரால் பேசப்பெற்றுள்ளது. அப்படியிருக்க, பாண்டிப் பதிகம் என்று பெயர் பெறுவதற்கு இதுவே காரணம் என்று சொல்வதற்கில்லை. தேவார மூவர்களிடமும் காணப்பெறாத நாட்டுப்பற்று அடிகளாரிடம் தலைதூக்கி நிற்கின்றது. ஆனால், அவர் பாண்டி நாட்டை நினைக்கும்பொழுதெல்லாம் வெறும் மண்ணையும் மக்களையும்மட்டும் நினைக்கவில்லை. 'பாண்டிநாடே பழம்பதியாகவும் (திருவாச2-18) என்று முன்னரும் குறிப்பிட்டுள்ளார் ஆதலின், பாண்டி நாட்டோடு ஆலவாய்ச் சொக்கனையும் சேர்த்தே அடிகளார் நினைந்தார் என்பதில் ஐயமில்லை. ஆதலால்தான் முன்னர் அரிகேசரியாய் போற்றி (திருவாச