பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 4:190) என்று பாண்டியனுடைய பட்டப் பெயரை இறைவனுக்கு ஏற்றிப் பாடியதுபோல, இப்பதிகத்திலும் 'பாண்டியனார்’ (திருவாச:528.530) என்று சொல்லை இறைவனுக்கே ஏற்றிப் பாடுகிறார். சென்ற Η /ώi) பதிகங்களில் திருப்பெருந்துறை நிகழ்ச்சியை நினைந்து நினைந்து இறும்பூது எய்திப் பாடியதுபோல, இப்பதிகம் முழுவதிலும் சொக்கன் குதிரைச் சேவகனாக வந்தததையும், அக்காட்சியைத் தாம் கண்டதையும் மிகுதியாகப் பாடியுள்ளார். எனவே, பாண்டிப் பதிகம் என்ற பெயரைப் பிற்காலத்தார் தந்திருப்பினும் ஆழ்ந்த யோசனையின்பேரில்தான் இத்தலைப்பைத் தந்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆனால், இந்த அருமைப்பாட்டை அறியாத சிலர் பொருத்தமில்லாத உட்தலைப்புக்களை இதுவரை தந்துள்ளதுபோல, இப்பதிகத்திற்கும் சிவானந்த விளைவு என்ற தலைப்பைத் தந்துள்ளனர். இப்பத்துப் பாடல்களிலும் சிவானந்தம் எங்கே பிறந்தது என்று தெரியமுடியவில்லை. 526. பரு வரை மங்கை தன் பங்கரைப் பாண்டியற்கு ஆர் அமுது ஆம் ஒருவரை ஒன்றும் இலாதவரைக் கழல் போது இறைஞ்சித் தெரிவர நின்று உருக்கிப் பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை அன்றி உருவு அறியாது . என் தன் உள்ளம் அதே f பாண்டியற்கு ஆர் அமுது என்று சொல்லியது இரண்டாம் வரகுணனுக்கு, அவன் பிறவியைப் போக்கி