பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 263 வேண்டுமென்ற விருப்பத்தை வளர்த்துக்கொண்டு உய்கதி அடையுங்கள்’ என்று பொருள்கூறினும் அமையும். 531, ஈண்டிய மாய இருள் கெட எப் பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன் வேண்டியபோதே விலக்கு இலை வாய்தல் விரும்புமின் தாள் பாண்டியனார் அருள்செய்கின்ற - முத்திப் பரிசு இதுவே. 6 பிறவிதோறும் வினைகள் தொடர்ந்து வருதலின் "ஈண்டிய மாயை' என்றார். செறிந்திருக்கின்றது. ஆதலின் "ஈண்டிய' என்றார். இந்த மாயையின் விளைவாக அஞ்ஞானமாகிய இருள் ஆன்மாவைச் சூழ்ந்துநிற்கின்றது. இருளைப் போக்கவல்லது ஒளி ஒன்றே ஆதலின் மாயையால் தோன்றிய அஞ்ஞானத்தைப் போக்கும் இறைவனைச் சோதி என்று அருளிச்செய்தார். அஞ்ஞான இருள் கெட்டவுடன் அதுவரை கண்ட பொருள்கள் புதிய விளக்கத்துடன் காட்சியளிக்கின்றன. அஞ்ஞானத்துடன் இருக்கையில் பொருள்கள் பல்வேறு வடிவுடன் காணப்படினும், அவற்றின் உண்மையான சொரூபம், அவற்றிடையே உள்ள தொடர்பு என்பவை. நன்கு விளங்குமாறில்லை. மெய்ஞ்ஞானம் ஏற்பட்டவுடன் இந்தச் சொரூபம், தொடர்பு என்பவை உள்ளவாறு தோன்றுகின்றமையின் எப்பொருளும் விளங்க' என்றார். அடுத்து, தூண்டிய என்ற பெயரெச்சம் சிந்திப்பதற்கு உரியது. சோதிவடிவினனாகிய இறைவன் ஏதோ ஒன்றைத்