பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 261 பிறப்பை எறியும் இறைவன், கிளர்கின்ற காலம் இக்காலம்; செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின்' என்றவாறு கொண்டுகூட்டுச் செய்தல் நலம். ‘தென்னன் என்ற பெயரை உடையவனும், நல்நாடு ஆகிய பாண்டி நாட்டின் தலைவனும் ஆகிய பாண்டிப்பிரான் எல்லா நேரத்திலும் எல்லாக் காலத்திலும் தன்பாலுள்ள ஞானம் என்ற ஒளிபொருந்திய வாளை, அதனுடைய உறையிலிருந்து எடுத்து ஆனந்தமாகிய குதிரைமேல் ஏறிச் செலுத்திக்கொண்டு, தம்மை நோக்கி, உள்ளன்புடன் வருகின்றவர்களுடைய உடம்பு இந்நிலத்தில் வீழுமாறு செய்து, பிறப்பை அறுப்பான். அவன் இப்பணியைச் செய்யப் புறப்படுகின்ற காலம் இப்பொழுது வந்துவிட்டது. ஆகையால், இப்பிறவியில் இருந்துகொண்டே அதில் கிடைக்கும் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்துப் பிறவியை விரும்புகின்றவர்களே! நீங்கள் அவனெதிரே செல்ல வேண்டா என்றவாறு. % உலகிடை வாழும் மக்கள் இருதிறத்தினர் ஆவர். பெரும்பான்மையானவர், கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்ற அடிப்படையில் இந்த உடம்புடன் அனுபவிக்கப்படும் இன்பங்களுக்காக, உடலை விரும்பிப் பேணிப் பாதுகாப்பர். இக்கூட்டத்தாரையே அடிகளார் ‘செறியும் பிறவிக்கு நல்லவர் என்று கூறுகின்றார். ஏனைய சிலர், இங்கு அனுபவிக்கப்படும் இன்பம் முதலியவை நிலையில்லாதவை, நிறைவில்லாதவை என்ற கருத்தில், தம் உடம்பைப் போக்கிக்கொள்ள வேண்டு மென்று விரும்புகின்றனர். ஆனால், உடம்பைப் போக்கிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கில்லை. அந்த நிலையில் திகைத்துச் செய்வதறியாது தவிக்கின்றவர்களை