பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 நோக்கி, ‘அவனை நோக்கிச் செல்க. ஆனந்தமாகிய குதிரையில் ஞானமாகிய வாளோடு வருபவன் தன்னை நோக்கி வரும் இவர்களை எதிர்கொண்டு இவர்களின் பிறவியைப் போக்குகின்றான்' என்று கூறுகின்றார். 530. காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின் கருது அரிய ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண் அரிய ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே 5 மூல பண்டாரம் - தலைமைக் கருவூலம். 'தத்தம் முடிவுக் காலம் எப்பொழுதென்று தெரியாமல் வாழ்கின்ற உலகீர்! உங்களுடைய வாழ்கின்ற காலம் இருக்கும்போதே இறைவனிடம் அன்புசெலுத்தி உய்கதியைத் தேடுவீர்களாக! பூமியை உண்டவனும், நான்முகனும் நெருங்கிச் செல்வதற்கு அஞ்சிய ஆலகால விடத்தைப் போனகமாக உண்டவன் யார் தெரியுமா? அவனே எங்கள் பாண்டிப்பிரான். அவன் இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறான் தெரியுமா? தன்னை நாடிவரும் அடியவர்கட்குத் தன்பாலுள்ள திருவருளாகிய கருவூலத்திலிருந்து அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறான். எனவே, உங்கள் பங்கைப் பெற இப்பொழுதே முந்துங்கள்’ என்றவாறு. காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின்' என்ற தொடருக்கு, அவன் வழங்கிக்கொண்டிருக்கும் காலம் இருக்கும்போதே அவனிடம் உடனே செல்ல