பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தூண்டுகிறான் என்றால், எதனைத் தூண்டுகிறான்? ஒன்றைத் தூண்டவேண்டுமானால் அது முன்னரே அங்கிருத்தல் வேண்டும். எரிய வேண்டிய அளவில் எரியாமல் ஒளி குன்றியிருக்கும் விளக்கைத்தான் தூண்ட முடியும். விளக்கு எரியவில்லையென்றால் தூண்டிய என்ற சொல்பயனற்றுப் போய்விடும். எனவே, ஒளிவடிவின னாகிய இறைவன் சோதி, தூண்டிய என்ற பெயரெச்சத்தை அடுத்து வருதலின் இச்செயலை அவன் செய்தான் என்பது பெறப்பட்டது. எதனைத் தூண்டினான்? ஆன்மாவினிடத்து இணைந்து நிற்கும் மெய்யுணர்வைத் தூண்டினான் என்பது பெற்றாம். மெய்யுணர்வைத் துண்டுதற்கு என்ன தேவை? அந்த ஆன்மாவையும், அதன் உடன் உறையும் மெய் உணர்வையும் தொடர்ந்து வருகின்ற அஞ்ஞானமாகிய இருள் மூடி மறைத்து நின்றது. அந்த இருளைத் தன் கண்களாலும் (சட்சு தீட்சை), திருவடிகளாலும் (திருவடி தீட்சை) போக்கி, உள்ளே உறையும் மெய்யுணர்வு வெளிப்பட அருளியதைத்தான் துண்டிய சோதி என்கிறார். பாண்டியனை (மீனவனை)ப் பொறுத்தமட்டில் இந்த இரண்டு தீட்சையும் நடைபெறவில்லை ஆதலால், எதிரே குதிரையின்மேல் அமர்ந்துள்ள சேவகன் ஆலவாய்ச் சொக்கன் என்பதை அவன் அறிந்தானில்லை. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. திருக்கோயிலில் இறைவனை வழிபடும் பழக்கமுடைய பாண்டியன், மதுரையம்பதியில் இறைவன் இயற்றிய பல திருவிளையாடல்கள்பற்றிக் கேள்விப்பட்டிருப்பினும், அப்பெருமான் குதிரைச் சேவகனாகவும் வருவான் என்று கனவிலும் கருதவில்லை. இங்குச் சற்று நின்று நிதானிக்க வேண்டும்.