பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 265 இப்பிறவியிலேயே பரகதியை அடையப்போகின்றவன் இந்தப் பாண்டியன். பெரிய அன்பின் வரகுண தேவர் என்று முற்றும் துறந்த பட்டினத்துப் பிள்ளையால் பாராட்டப்பெற்றவன். குதிரைச் சேவகனாகத் தன் எதிரில் இருக்கும் சொக்கனை அவன் எப்படி அறியாமல் போய்விட்டான்? அறிய முடியாவிடினும் பெரும் பக்தனாகிய பாண்டியனின் உள்ளத்தில், எதிரே உள்ள வடிவம் உள்ளுணர்வைத் துரண்டியிருக்க வேண்டுமே! நிச்சயமாகத் துண்டியிருக்கும். அறிவால் அறிந்துகொள்ள முடியாவிடினும், உள்ளுணர்வு காரணமாக, எதிரே உள்ளவன் சாதாரணக் குதிரைச் சேவகன் அல்லன் என்பதை உணர்ந்திருக்க வேண்டுமல்லவா? அந்த உள்ளுணர்வு வளர்ச்சியடைந்து, அறிவைத் தன்வசப்படுத்தி உண்மையை அறிவித்திருக்கவேண்டும். அவ்வாறு நடை பெறாமைக்குரிய காரணங்கள் இரண்டு. முதலாவது, குதிரைச் சேவகன் கொண்டுவந்த குதிரைகளின் கம்பீரமும், அழகும் பாண்டியன் மனத்தைத் தம்பால் ஈர்த்துவிட்டன. இரண்டாவது, குதிரைச் சேவகன் அரசனாகிய தன்முன் இறங்கிப் பணியாமல் குதிரையின்மேல் இருந்த படியே உரையாடியது பாண்டியனின் அகங்காரத்தைத் தூண்டிச் சினங் கொள்ளச் செய்திருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களால், பாண்டியனின் உள்ளுணர்வு பணி புரிந்தும் அது பயன்படாமல் போய்விட்டது. இவற்றையெல்லாம் மனத்துட் கொண்ட அடிகளார் மீனவனும் சோதியைக் காணவல்லன் அல்லன், அறிய வல்லன் அல்லன், தெரியவல்லன் அல்லன், உணர வல்லன் அல்லன் என்றெல்லாம் கூறாது, சொல்ல வல்லன் தி.சி.சி.IV 18