பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அல்லன் என்பதால் உண்மையை உணர்ந்து தான் உணர்ந்துகொண்ட அக்கருத்தைப் பிறர் அறியச் சொல்ல விரும்பியிருந்தால்கூட அது அவனால் முடியாது. என்பதைக் குறிக்கவே வல்லன் அல்லன் என்றார் அடிகளார். அடுத்து உள்ள தொடர், மேலே நாம் கூறிய கருத்திற்கு அரண் செய்வதாக அமைந்துள்ளது. வேண்டியபோதே விலக்கு இலை வாய்தல் என்பதாகும் அத்தொடர். இதன் பொருள் அவன் அருள்செய்ய விரும்பினால் அந்த விநாடியே அது கைகூடுவதற்குத் (வாய்தல்) தடையில்லை (விலக்கிலை) என்றபடி, இதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அருளைப் பெறவேண்டுமென்று நாம் செய்யும் முயற்சிகள் முடிவான பயனைத் தரும் என்று கூறுவதற்கில்லை. ஆனால், அருள் செய்யவேண்டும் என்று அவன் நினைத்துவிட்டால் அந்த அருள் நம்மை நோக்கிப் பாய்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்றபடி, ஆலவாய்ச் சொக்கன், அடிகளாருக்கு அருள் செய்ய வேண்டும் என்று விரும்பிவிட்டான். எனவே, திருப்பெருந்துறையில் எவ்விதத் தடங்கலுமின்றி அடிகளாரிடம் அருள் பாய்ந்தது. பாண்டியனைப் பொறுத்தமட்டில், குதிரைச் சேவகனாக வந்து காட்சி தந்தானேனும், பின்னர் மண்சுமந்து கூலியாளாய் வந்து காட்சி தந்தானேனும் அவர்கள் இருவரையும் இன்னார் என்று இனங்கண்டு. கொள்ளும் வாய்ப்புப் பாண்டியனுக்கு ஏற்டவில்லை. இதனைத்தான் அடிகளார் மீனவனும் சொல்லவல்லன் அல்லன்' என்று கூறினார். மீனவன் என்பது எல்லாப் பாண்டியர்களுக்கும் பொதுப்பெயராயினும், மீனவனும்