பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 267 என்ற சொல்லிலுள்ள உயர்வுச் சிறப்பு உம்மை வரகுணனையே குறித்து நின்றது. அடுத்து நிற்பது 'விரும்புமின் தாள்' என்பதாகும். எந்த ஒருவனும் அருளை விரும்புமாறு செய்வது சொக்கனுடைய பணியன்று. அப்படியானால் உயிர்களாகிய நாம் செய்யவேண்டியது என்ன ? அவன் திருவடிகளை அன்புடன் விரும்புகின்ற ஒரே பணிதான். இந்த ஒரு பணியை விடாது செய்தால் உரிய காலத்தில் அவன் திருவருள் நம்மை நோக்கிப் பாயும். பாண்டியனார் என்று அழைக்கப்படும் ஆலவாய்ச் சொக்கன் உயிர்களுக்கு முத்தியளிக்கும் வழிவகை (பரிசு) இதுவேயாகும் என்றபடி 532. மாய வனப் பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும் போய் அறும் இப்பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு ஆய அரும் பெரும் சீர் உடைத் தன் அருளே அருளும் சேய நெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே 7 காட்டில் வாழ்கின்ற நரிகளையெல்லாம் குதிரைகளாக மாற்றிக் கொண்டுவந்தமையின் 'வனமாயப் பரி என்றார். அவ்வாறு கொண்டுவந்த குதிரைகளில் ஒரு குதிரையின் கடிவாளத்தைப் பாண்டிய மன்னனிடம் விற்றதற்கு அடை யாளமாகக் குதிரை சேவகன் கயிறுமாறிக் கொடுத்தான். பாண்டிய மன்னன் குதிரையின் கடிவாளத்தைத் தன் கைகளில் பெற்றுக்கொண்டானே தவிரப் பெற்றுக் கொண்ட அந்த விநாடியில் அவனையும் அறியாமல் ஒர் அற்புதம் நிகழ்ந்தது. அது என்ன தெரியுமா?