பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'இப்பிறப்பு' என்று கூறியவர் பகைகள்' என்று பன்மையாகக் கூறியமையின், பிராரத்துவ வினை காரணமாகப் பாண்டியன் இப்பொழுது பெற்றுள்ள பிறப்பும், இனி ஆகாமியம், சஞ்சிதம் காரணமாக அவனுக்கு வரவேண்டிய பல பிறப்புக்களும் மாறிய கயிற்றை அவன் கைகளால் பெற்றவுடன் போய் ஒழிந்தன. போய் அற்றன என்று இறந்த கால வாய்பாட்டால் கூறாமல், 'அறும் என எதிர்கால வாய்பாட்டால் கூறியமைக்கு ஒரு காரணமுண்டு. இந்தப் பாண்டியன் இன்னும் சில காலம் உயிருடன் இருந்து, இன்னும் சில அற்புதங்கள் நிகழக் காரணமாயிருந்து, பின்னரே வீடு பேற்றைக் அடையப்போகின்றான் ஆதலின் அறும் என எதிர்கால வாய்பாட்டாற் கூறினார். தென்னவனாகிய அப்பெருமான், தன்பால் அடைக்கலமாகப் புகுந்தவருக்குத் தன்னுடைய பேரருளை வாரி வழங்குவான் என்கிறார். அருளை வாரி வழங்குகிறான் என்பதோடு நிறுத்தாமல் 'நெடுங்கொடைத் தென்னவன்' என்று கூறியமையால் திருவடியில் புகுந்தவர்கள் தராதரம் பார்த்து அவன் இன்னருளை வழங்காமல் ஒரு கொடையாளிபோல் தன் அருளை வாரி வழங்குகிறான் என்பது பெறப்பட்டது. 533. அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்திக் கழிவு இல் கருணையைக் காட்டிக் கடிய வினை அகற்றிப் பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டிப் பெரும் பதமே முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்துமினே 8