பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்திலாப் பத்து 19 (பருகி ஏப்பமும் விட்டேன். (தேக்கியும். தேக்கெறிதல்) அந்த நிலை மாறியவுடன் அதுபற்றி மீட்டும் நினைந்து ஓயாமல் உருகவேண்டியவனாகிய நான் இப்பொழுது உருகாமல் இருக்கின்றேன்’ என்கிறார். அடிகளார் தம் வாழ்நாளில், அதற்கு முன்னர்க் கண்டறியாத உள்ளத்து உருக்கம் (மன உருக்கம் அன்று) திருப்பெருந்துறையில் கிடைத்தது என்பதை அவரே பல இடங்களில் கூறியுள்ளார். ஆனால், இப்பொழுது அந்த அற்புதமான உள்ளத்து உருக்கமும் கைநழுவிவிட்டது என்பதை உருகேன்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். இந்த உள்ளத்து உருக்கம் நிறைந்திருந்தபோது பேரானந்தம் (களிப்பு) மிகுந்திருந்தது. முதலாவதாக உருக்கம் போயிற்று; அதனை அடுத்து களிப்பும் போயிற்று. இவை இரண்டும் போனவழி எஞ்சியது மாபெரும் கலக்கமே ஆகும். அதனையே 'களிப்பெலாம் (கெட) மிகக் கலங்கிடுகின்றேன்’ என்று பாடுகிறார். கலக்கம் வந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமல் திகைக்க நேரிடும். உலகியலிற்கூட இத்தகைய திகைப்பை அடைந்தவர்கள் தமக்கு உற்றவர் களைத் துணைக்கு அழைப்பார்கள். அதே செயலைத்தான் அடிகளாரும், வளைக்கையானொடு (திருமால்) மலரவன் அறியா வானவா!’ ‘மாதொருபாகா' என்று விளித்துத் துணைக்கு அழைக்கின்றார். இந்த இரண்டு விளிகளும் கருத்துடை விளிகளாகும். கலங்கி நிற்கும் ஒருவர், தம்மைப் போலக் கலங்கிநின்ற இருவரை நினைவுகூர்கின்றார். அப்படிக் கலங்கியவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். ஒருவன் செல்வத்தின்