பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 நின்றால், அதையும் தருவான் என்ற கருத்தில் முழுது உலகும் தருவான்’ என்றார். இவ்வாறு அவன் தருவது அவர்கள் பக்தி அளவிற்கு ஏற்ற விகிதாசாரத்தில் இருக்கும் என்று யாரும் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக, பாண்டிப் பெரும்பதத்தையும், முழுதுலகையும் தருவான் என்றதோடு நிறுத்தாமல் 'கொடையே தருவான்’ என்று முடித்தார். இரண்டாவது வகைப் பக்தர்கள் அடிகளாரைப் போல் இறைவன் திருவடியைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாமல் வேண்டேன் செல்வம் (திருவாச:512) என்று வேண்டி வழிபடுபவர்களாவர். இந்த இரு வகையோரையும் பார்த்து, சென்று முந்து மினே' என்கிறார் அடிகளார். முந்த வேண்டும் என்று சொல்வதற்குரிய காரணத்தை முன்னரே 'காலம் உண்டாகவே காதல் செய்து உயம்மின் (திருவாச:530) என்ற இடத்தில் விளக்கியுள்ளார். 534. விரவிய தீ வினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப் பரவிய அன்பரை என்பு உருக்கும் பரம் பாண்டியனார் புரவியின் மேல் வரப் புந்தி கொளப்பட்ட பூம் கொடியார் மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே ’9. ‘விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர்' என்பது ஒன்றோடொன்று கலந்துநிற்கின்ற பிறப்பு, வினை என்ற கடல்களாகும். வினையையும், பிறப்பையும் விரவிய என்றதால் வினையும் பிறப்பும் ஒன்றுக்கொன்று 'தாரண