பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 27 காரியத் தொடர்புபட்டு நிற்கின்றன என்பதாம். அதாவது, வினை பிறப்பை உண்டாக்குகிறது; பிறப்பில் வினை செய்யாமல் இருக்க முடியாது; அந்த வினையே மறுபடியும் பிறப்பை உண்டாக்குகிறது. முடிவற்ற சங்கிலிபோல் உள்ள இதனைக் கடல் என்று உருவகித்தது சாலப் பொருந்தும். இக்கடலைக் கடக்கவேண்டு மென்று தன் திருவடிகளில் வீழ்ந்து சரண் புகும் அடியவருக்கு (பரவிய அன்பருக்கு அவன் முதலில் செய்கின்ற காரியம் ஒன்று உண்டு. இப்பிறப்பின் இறுதியில் வீடுபேற்றைத் தருவதும் அல்லாமல் அதற்கு முன்னரே இப்பிறப்பிலேயே அவர்கள் என்பை உருக்கும் அருளைத் தருகின்றான். பாண்டியனார் என்ற பொதுப்பெயரில் இருந்து ஆலவாய் அழகனைப் பிரித்துக்காட்ட ‘பரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் அடிகளார். 'பரவஸ்து’ என்று சிலர் கூறுவதுபோலக் கூறினால், அது அஃறிணைப் பொருளதாகி மனத்தில் நெருடலை உண்டாக்குமோ என்று அஞ்சிய அடிகளார் ‘பரம் பாண்டியனார் என்றார். ஆன்ம நாயகனாகிய இறைவன் ஒருவனே புருஷனாவான். இதனாலேயே வைணவர்கள் புருஷோத்தமன் என்ற பெயரை இறைவனுக்குத் தந்தனர். . மதுரையம்பதியில் பரம்பரையாக வந்த பாண்டி மன்னர்கள், குதிரைச் சவாரி செய்துகொண்டு தெருவில் செல்வது அன்றாட நிகழ்ச்சி, ஒருநாள் இருநாள் பாண்டியன் செலவை யாரென அறியும் ஆர்வத்தோடு கண்ட மகளிர், அவன் இன்னான் என அறிந்ததும் 'பூ . இவன்தானா? என்ற எண்ணத்துடன் திரும்பிவிடுவர்.