பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 : திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஆனால், ஏதோ ஒருநாள், குதிரைச் சேவகன் ஒருவன், நூற்றுக் கணக்கான குதிரைகள் பின்வர அவற்றை நடத்திச் செல்கிறான். இவன் மன்னன்கட்ட அல்லனே! அப்படியிருக்க, சாதாரண குதிரைச் சேவகனாக வருகின்ற இவனை, மகளிர் கண்டனர்; தம் அறிவு மயங்கினர். பூங்கொடி போன்ற அவர்கள் ஆடாது அசையாது மரம்போல் நின்றுவிட்டனர். பூங்கொடியார் என்ற சொல்லால் ஓயாது ஒடி அசைந்துகொண்டிருக்கும் கொடியை நினைவூட்டுகிறார் அடிகளார். அப்படி ஆடி அசையும் இயல்புடைய மகளிர் "மிர இயல்’ மேற்கொண்டார். அதாவது, ஆடாது அசையாது நிற்கும் மரத்தின் இயல்பை மேற்கொண்டனர். முதலில் அறிவு மயங்கினர்; அடுத்து மரம்போல் நின்றனர். மரம் ஆடாது அசையாது நின்றாலும் காற்றை உள் இழுத்து, பிராண வாயுவை வெளியிடும் இயல்பை உடையதன்றோ! ஆனால், மரம்போல் நின்ற மகளிர், தாம் என்ற நினைவேயின்றி நின்றுவிட்டனர் என்கிறார் அடிகளார். - முதலாவது நடைபெற்றது அறிவு மயங்குதல்; இரண்டாவது அசையாது நிற்றல், மூன்றாவது தான் என்ற நினைவை இழத்தல், பூங்கொடியார் என்று அடிகளார் கூறினாரேனும் விலங்குமுதல் மக்கள்வரை எல்லா உயிர்கட்கும் இயல்பானதொரு வளர்ச்சியைக் கூறியுள்ளார் அடிகளார். - முன்னம் அவனுடை நாமம் கேட்டாள்" (திருமுறை:6:25-7) என்று தொடங்கும் நாவரசர் பெருமானின் பாடல் முழுவதையும் இந்த ஒர் அடியில் சுருக்கிக் கூறிய பெருமை அடிகளாருக்கு உரியதாகும். 'தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்' என்ற