பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 273 இரண்டும் நாவரசரின் அப்பாடலின் இறுதிப் பகுதியாகும். அடிகளார் கூறிய தம்மையும் தாம் அறியார் என்ற தொடரில் இப்பொருள் முழுவதும் வருவதைக் காணலாம். அதாவது, ஆணவம் முற்றிலுமாக அழிந்த நிலையில்தான் தம்மைத் தாம் அறியாது நிற்கும் நிலை ஏற்படும். . குதிரைச் சேவகன் தெருவோடுதான் போகின்றான். அவன் யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை. ஆனால், அவனிடமிருந்து புறப்பட்ட அருள் அலைகள் இவ்வாறு செய்கின்றன. 535. கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால் வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்பால் ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றைச் சேவகனே தேற்றம் இலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே 10 இப்பாடலில் முதலடியில் வரும் ஐவர் கோக்களையும் வென்று என்ற பகுதி நன்கு விளங்குமாறில்லை. ஐம்பொறிகளையும் வென்றவன் என்று பலரும் உரை கூறியுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு இயல்பை இறைவனுக்கு ஏற்றுவது பொருத்தமாகத் தெரியவில்லை. பாடல் அமைந்துள்ள முறையில் கூற்றை வென்று, கோக்கள் ஐவரையும் வென்று தேவியும் தானுமாக வீற்றிருந்தான் என்று வருவதால், ஐவர் கோக்களை வென்று என்ற தொடருக்கு, ஐம்பொறிகளாகிய மன்னர்களை வென்று என்று பொருள்கூறுவது சரியாகப் படவில்லை. அதே நேரத்தில் வேறுவிதமாகப் பொருள் கூறவும் சொற்கள் இடந்தரவில்லை. -