பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த பத்து 279 வாழ்வித்த மருந்தே என்றார். இப்பணியைத் தமக்குமட்டும் செய்ததாக அடிகளார் கூறவில்லை. என் குடி முழுவதும் ஆண்டு வாழ்வு அற வாழ்வித்தவன் என்பதால், மனித சாதி முழுவதற்கும் ஒரு வாழ்வைப் போக்கி, Լնի)յ வாழ்வைத் தந்தான் என்ற பொருளில் பேசுகின்றார். இவ்வாறு கூறுவது அடிகளாரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுவதாகும். நான்காவது அடியில் ‘எம்பொருட்டு என வருவதும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும். 'எம்' என்ற தன்மைப் பன்மைச் சொல் மனித சமுதாயம் முழுவதையும் குறிப்பதாகும். இந்த அருமைப்பாட்டைப் போப் போன்ற பிற சமய மேநாட்டு அறிஞர்கள் அறிந்துகொண்டது போலத் தமிழர்களாகிய நாம் அறியவில்லை. மூன்றாவது அடியில் வரும் சீருடைக் கழலே சிவபெருமானே! என்பது சற்று விநோதமான விளிகளாகும். ஒருவரை விளிக்கும்போது அவர் பெயரைச் சொல்லி விளிப்பது முறையாகும். ஆனால் அவரை விளிப்பதற்கு முன்னர், அவருடைய உறுப்பு ஒன்றை (திருவடிகளை) விழிப்பது புதுமையாகும். திருவாதவூரரைத் தடம் மாற்றி, மணிவாசகராக ஆக்கியது, குருநாதரின் திருவடிகள் ஆதலால், திருவாசகம் முழுவதிலும், திருவடிக்கு ஒரு தனிச்சிறப்புத் தந்து பேசுவதைக் காணமுடியும். திருப்பெருந்துறையில் திருவாதவூரரின் கண்களில் முதலில் பட்டது குருநாதரா, அல்லது அவருடைய திருவடிகளா என்ற வினாவிற்கு விடை கூறுவார்போலப் புவனியில் சேவடி தீண்டினன் காண்க திருவாச:3: 1, 62) என்று பாடியுள்ளமை சிந்திக்கற்பாலது. குருநாதரின் முகம், முதலியவற்றை வைத்து அவரைச் சிவன் எனத் தேறியதாக அடிகளார் பாடவில்லை. அதற்குப் பதிலாகப் புவனியில்