பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம் - - - (திருமந்திரம் 2264) என்று பாடிச் செல்கிறார். பல குற்றங்கள் நிறைந்தவராகிய தமக்கு, எதிர்பாராமல் இறைவன் கிடைத்தான் ஆதலால், 'வம்பு எனப் பழுத்து' எனக் கூறுகின்றார். பழுத்த ஒன்று, எப்படிப் பழுத்திருப்பினும் அதனை உண்டவருக்குமட்டுமே நலம் செய்யும். ஆனால், திருப்பெருந்துறையில் திடீரென்று பழுத்த பழம், அதனை உண்ட திருவாதவூரருக்கு மட்டுமல்லாமல்-அவரோடு தொடர்புடைய பாண்டி மன்னன் முதலானவருக்கு மட்டுமல்லாமல்-மனித சமுதாயம் முழுவதும் உய்ய வழிவகுத்தது. ஆதலின், ‘என்குடி முழுது ஆண்ட' என்றார். இவ்வாறு பொருள் கொள்ள என்குடி ஆண்ட என்றும், குடி முழுதும் ஆண்ட என்றும் பிரித்துக் காணவேண்டும். என்குடி என்பதற்கு இவ்வாறு பொருள் கூறாமல், அடிகளார் பிறந்த குடி என்று பொருள் கூறுதல் உலகம் உய்யத் திருவாசகம் தந்தவரை, உறவினர் என்ற சிறு குப்பிக்குள் அடைப்பதுபோலாகும். ‘வாழ்வு அற வாழ்வித்த மருந்து என்பது, ஒன்றைப் போக்கி மற்றொன்றைத் தருகின்ற ஒன்று என்ற பொருள் தரும். அறுக்கப்பட்ட வாழ்வு வினையின் விளைவாகச் கிடைத்த வாழ்வாகும். அதனைப் போக்குவது கடினம் ஆதலால், அக்கடிய செயலை எளிதாகச் செய்தான் ஒருவன் என்பதை விளக்க வாழ்வு அற' என்றார். ஒன்றை அற்றுப்போகும்படியாகச் செய்தல் கடினம். ஆனால், அந்த இடத்தில் பிறிதொன்றை நிலைபெறுமாறு செய்தல் அதைவிடக் கடினமாகும். வினைப்போகமான வாழ்வை நீக்கி, மெய்யான வாழ்வு வாழ வழிசெய்தான் ஆதலின், ‘வாழ்வு அற