பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த பத்து 277 இல்லை. ஒரே அடியில் தாதாய் மூ ஏழ் உலகிற்கும் தாயே (திருவாச:446) என்பன போன்ற பகுதிகளில் அம்மை அப்பன் என்று குறிப்பு வருவதை வைத்துத் தோணிபுரத்தில் அருளப்பெற்றது என்ற முடிவிற்கு வர முடியவில்லை. 536. உம்பர்கட்கு அரசே ஒழிவு அற நிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு அற வாழ்வித்த மருந்தே செம்பொருள் துணிவே சீர் உடைக் கழலே செல்வமே சிவபெருமானே எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே f ஊற்றையேன் - அழுக்கு நிறைந்தவன். யோகம் என்பது பிளவுபடாமல் ஒன்றோடொன்று பொருந்தி நிற்பதைக் குறிப்பதாகும். இங்கு இறைவனை யோகம் என்று குறிப்பிடுவதோடுமட்டும் நிறுத்தாமல் 'நிறைந்த யோகம்’ என்றும், ஒழிவு அற நிறைந்த யோகம்’ என்றும் கூறுதல் சிந்திக்கத்தக்கது. எங்கும் நிறைந்திருப்பதாகக் கூறப்படும், காற்றுக்கூட இல்லாத, இடங்கள் எனச் சில உண்டு. ஆனால் இறைவன், இல்லாத இடம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லாமல் (ஒழிவு அற) எங்கும் நிறைந்திருக்கின்றான். அப்படி நிறைந்திருக்கின்ற அவனுக்கு, தனித்தன்மை ஏதாவது இருப்பின், எவ்வளவு கலந்திருந்தாலும் அவனை நாம் இனங்கண்டுகொள்ள முடியும். ஆனால் இவனுடைய தனித்தன்மை என்பதே பொருளோடு கலக்கும்போது வேறுபாடற்றுக் கலந்து நிற்பது ஆகும். இதனையே திருமூலர், -