பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 சாதாரணமாக, பிடித்தல் என்ற சொல்லுக்குக் கைகளால் பருப்பொருளாக நிற்கும் வேறொன்றைக் கைகளால் பிடித்தலையே பொருளாகக் கூறுவர். மனம் ஒன்றைப் பற்றுதலை, பிடித்தல் என்ற சொல்லால் கூறுவது, புதுமையான வழக்காகும். தன் கருணை காரணமாக அடிகளார் உள்ளத்தில் இறைவன் புகுந்தானேனும், புகுந்த அவனை மீண்டும் வெளியே விடாமல், அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டிருக்கின்ற செயலை வேறு எந்தச் சொல் கொண்டும் இவ்வளவு அற்புதமாக விளக்கியிருக்க முடியாது. அறிந்தது கொண்டு அறியாததை விளக்குவது போல, கைகளால் பிடிக்கின்றதாகிய அறிந்த செயலைக் குறிப்பிடும் பிடித்த என்ற சொல்லைக்கொண்டே தம் உள்ளத்தில் நிகழ்கின்ற செயலை அடிகளார் எடுத்துக் கூறுகின்றார். - உட்தலைப்புத் தந்தவர்கள் வழக்கம்போல் இதிலும் குழப்பியுள்ளனர். இறைவன் திருவடிகளில் சென்று சேர்வதாக இதுவரையில் கூறிவந்த ஒன்றை முற்றிலும் மாற்றி, அவர் திருவருளாகிய திருவடியைத் தம் மனத்துள் சிறைப்பிடித்ததாக அடிகளார் கூறும் இப்பதிகத்தில் முத்தியும் இல்லை, கலப்பும் இல்லை. - - ஆன்மா இறைவன் திருவடியைச் சென்று சேர்தலை முத்தி என்பர். அதன் எதிராகத் தானாகவே அவருள் வந்து தங்கிய திருவடியைத் தம் மனத்திற்குள் சிறைவைத்துவிட்டு, ‘鹰 இனி எங்கே வெளிப்படப் போகிறாய் பார்க்கலாம்? என்ற பெருமிதத்தோடு வெளிவரும் அடிகளார் பாடலுக்கு 'முத்திக் கலப்பு’ என்று பெயரிட்டது ஒரு சிறிதும் பொருந்தாமை அறிக. - 'அம்மையே அப்பா என வருவதால் இப்பதிகம் தோணிபுரத்தில் இயற்றப்பெற்றது என்பதும் பொருந்துமாறு