பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்றார். விளைந்த என்று கூறியமையின் அன்பாகிய பயிர் நிலைபெற்று வளர்ச்சியடைந்து முற்றியிருக்க வேண்டும் என்பது ஒருதலை. அன்பு அப்படியிருந்தால் அதிலிருந்து ஆரமுது விளையும். எல்லையற்ற அன்பு விரியும்போது அது இறுதியில் சிவத்தினிடத்து கொண்டு செலுத்தும். அதாவது, அன்பு முற்றிய நிலையில் அங்கே சிவம் விளையும் என்பதைக் குறிப்பாக உணர்த்தினார். பொய்யான வாழ்வில் ஈடுபட்டு, கானல் நீர் போன்ற இன்ப வேட்டையில் அலைந்து திரிந்த தம்மை, அழைத்துச் சிவ பதத்தை அளித்தான். - அப்படிப்பட்ட அவனை இந்தப் பிறவியிலே சிக்கெனப் பிடித்துக்கொண்டதாகவும், தம்மை விட்டு அவன் எங்கும் செல்ல முடியாது என்றும் கூறுகிறார். 539. அருள் உடைச் சுடரே அளிந்தது ஒர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே பொருள் உடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே இருள் இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே 4 அளிந்ததோர் கனி-பக்குவமாகக் கனிந்த கனி. உலகிடை உள்ள சுடர், ஒளியைத் தருவதே ஆயினும் நெருங்கினவர்க்குத் தன் வெம்மையையும் தந்துவிடும். ஆனால், இறைவனாகிய சுடர், நெருங்க நெருங்க வெம்மையைத் தாராமல் குளிர்ந்த இன்பத்தைத் தருதலின் 'அருளுடைச் சுடர்' என்றார். - . . . - பொருளுடைக் கலையே' என்பது மிக நீண்ட காலமாக இந்த நாட்டிலும், பிற நாடுகளிலும்கூட விடை