பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த பத்து 283 கூற முடியாமல் இருந்துவரும் ஒரு வினாவாகும். கலைகளின் பயன் என்ன என்ற வினாவிற்கு மனத்திற்கு மகிழ்வை ஊட்டி, கற்பனையைத் தூண்டி இன்பம் அளிப்பதே கலையென்பர் ஒரு சாரார், இதன் மறுதலையாகக் கலை என்பது தேனைப் போல அனுபவிக்கின்ற அந்த நேரத்தில் இன்பத்தைத் தருவதுடன் வாழ்வைச் செம்மைப்படுத்தும் பிற்பயனையும் தரவல்லதாய் இருத்தல் வேண்டும் என்பர் மற்றொரு சாரார். எல்லாக் கலைகளிலும் இறைவன் நிறைந்துள்ளான். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பயனைத் தருவது போலக் கலை வடிவாகவுள்ள அவனும், மெய்ப்பொருளை அறியும் மெய்ஞ்ஞானத்தைத் தன்னை அண்டியோர்க்கு அளிக்கின்றான். இதனையே அடிகளார் பொருளுடைக் கலையே’ என்கின்றார். நமக்கு இன்பம் தரும் ஒன்றைப் புகழ்ந்து பேசுவது மனித இயற்கை நிலைபேறில்லாத, அழியும் தன்மையுள்ள உலக இன்பங்களைத் தருபவர்களைப் புகழ்கிறோம் என்றால், நிலையானதும் இம்மை மறுமைப் பயன்களைத் தருபவனுமாகிய அவனைப் புகழ்வதில் என்ன தவறு? புகழ்ச்சியில் உள்ள ஒரு குறைபாட்டை இங்கு அறிதல் வேண்டும். ஒருவரைப் புகழ்கின்றோம் என்றால், அப்புகழுரையைத் தருபவர் தாம் நிறையப் புகழ்ந்து விட்டதாக நினைக்கின்றார். அந்தப் புகழுரையைப் பெறுபவரும் தம்முடைய செயலுக்கு ஏற்ற வெகுமதி கிடைத்துவிட்டதாக மகிழ்கின்றார். - ஆனால், இறைவனைப் பொறுத்தமட்டில் நின் அளந்து அறிதல் (புகழ்தல்) மன்னுயிர்க்கு அருமை’ (திருமுருகாற்றுப்படை 278) ஆதலின், எவ்வளவு புகழ்ந்தாலும் அது முற்றுப்பெறப்போவ தில்லை. அந்தப் புகழுரைக்கு உரியவனோ மகிழ்ச்சி இன்பம் முதலியவற்றைக் கடந்து நிற்பவன். இவற்றையெல்லாம்