பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அடைக்கலப் பத்து (பக்குவ நிர்ணயம்) தக்கவரிடத்து ஒரு பொருளையோ அன்றி ஒரு மனிதரையோ அடைக்கலமாகத் தருதல் இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவியிருந்த ஒரு பழக்கமாகும். தாங்கள் இந்த இளையவனை ஏற்றுக் கொண்டு பாதுகாத்தருள்க’ என்று வேண்டி, பெரியவர்கள்பால் இளையோரை ஒப்படைப்பது கையடை எனப்படும். இதன் எதிராக, தக்க வயதும் தகுதியும் உடையவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பெரியவரை அண்டித் தம்மை அவரிடம் முழுவதுமாக ஒப்படைத்தல் அடைக்கலம் என்று சொல்லப்படும். கையடையாகத் தரப்பெறுபவர் ஆண்டிலும் அனுபவத்திலும் இளையர் ஆதலின் இவர்களை அடைக் கலமாக ஏற்றுக்கொள்க என்று ஒரு பெரியவர் தருவதையே கையடை என்று குறிப்பிட்டோம். இதிலுள்ள தனித்துவம் என்னவென்றால், கொடுக்கப்படுபவரின் சம்மதம், விருப்பு வெறுப்பு என்பவை கையடையில் இடம் பெறுவதே இல்லை. அடைக்கலத்தில் இம்முறை மாறியிருக்கும். வீடணன் தானாகவே வந்து அடைக்கலம் புகுந்தான். அதேபோன்று, பெரும்பாலான அடியார்கள் இறைவனிடம் தாமாகவே வந்து அடைக்கலம் புகுகின்றனர். இவ்வாறு அடைக்கலம் புகுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அடைக்கலமாகத் தம்மைக் கொடுப்பவர், முழு