பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மானிடச் சாதி முழுவதையும் ஆட்கொண்டான்' என்கிறார். கதவு திறக்கப்பட்டு ஒளி உள்ளே நுழைந்ததுபோல, என்னை மூடியிருந்த அஞ்ஞானமாகிய இருட்கதவு திறக்கப்பட்டவுடன் என் மனத்துள் நுழைந்த ஒளிபோன்ற பெருமானே! இந்தப் பிறப்பு அவமே கழிந்து இறப்பை நாடுமுன் உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன் என்றும் கூறுகிறார். 542. பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னைப் பற்றும் ஆறு அடியேனற்கு அருளிப் பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே தேசு உடை விளக்கே செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவத இனியே 7 'உயிரைப் பற்றிநின்று பிறவிதோறும் தொடர்ந்து வருகின்ற பாசத்தை வேரொடு அறுக்கும் பழம் பொருளாகிய அப்பெருமான் தன்னுடைய திருவடிகளைப் பற்றிக்கொள்ளுமாறு காட்சி தந்து எனக்கு அருள் செய்தான். என்னுடைய வழிபாட்டை ஏற்றுக்கொண்டு என் சிந்தையுள் புகுந்தான்; அம்மட்டோடு இல்லாமல் யாரும் காணமுடியாத அத்திருவடிகளை ஊனக் கண்ணாலும் штбёт காணுமாறு அருளினான். அப்படிப்பட்ட அவனைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன்’ என்கிறார். 543. அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு இல்லாச்