பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த பத்து 287 சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே பித்தனே எல்லா உயிரும்.ஆய்த் தழைத்துப் பிழைத்து அவை அல்லையாய் நிற்கும் எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே . 8 பிழைத்து நிற்றல்-அவற்றின் நீங்கித் தனித்து நிற்றல் அண்டரண்டம்’ என்ற சொல்லுக்குத் தேவர் உலகம் எனப் பொருள் கண்டுள்ளனர். அண்டம் என்ற சொல் பிரபஞ்சம் என்ற வடசொல்லின் நேர் பொருளைத் தருவதாகும். கருவியாலும், கணக்காலும் காணப்படுகின்ற இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பாலோ இப்பாலோ ஏதேனுமோர் பிரபஞ்சம் இருக்குமாயின் அதற்கும் ஆதியாய் உள்ளவன் என்கிறார். அண்டரண்டம், அண்டபகிரண்டம் ಜT<ಕ?" வரும் தொடர்களின் பொருளைப்போல அண்டரண்டம் என்ற சொல்லுக்குப் பொருள் விரிக்கலாம். அண்டம் என்ற ஒரு சொல்லிலேயே எல்லாப் பொருளும் அடங்கிவிடுதலின் அண்டத்தின் ஆதியே என்றார். இனிக் கருத்தளவையாலும், அருத்தாபத்தியாலும் வேறு ஏதேனும் ஒர் அண்டம் இருக்கிறது என்று சொல்லும் நிலை வந்தால் அதற்கும் ஆதியாகவுள்ளவன் என்ற பொருளைத் தந்து நிற்கின்றது. இந்த அண்டம் மகாப் பிரளய காலத்தில் துகளாக மாறி மீண்டும் படைப்புக் காலத்தில் அண்டமாக விரிகின்றது. காலம் என்ற தத்துவத்தில் இந்த அண்டம் பல முறை தோன்றி, மறைந்து மறுபடியும் தோன்றியுள்ளது ஆதலின், அண்டரண்டம் என்ற சொல்லாலும் அதனைக் குறிக்கலாம். எல்லாவற்றிற்கும் 'ஆதி என்று கூறியவுடன் ஒர் ஐயம் தோன்றக்கூடும். அண்டம் என்ற சொல்லால் குறிக்கப்படும்