பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்பிரபஞ்சத்திற்குத் தோற்றம், இருப்பு, மறைவு ஆகியவை உண்டு ஆதலால், அதற்கு ஆதியாக உள்ளவனுக்கும் இம்மூன்று நிலைகள் உண்டோ என்று ஐயுறுவார்க்கும் விடை கூறுவார்போல, ஈறில்லாச் சித்தன்' என்றார். சித்தன் என்பவன் அட்டமா சித்திகளும் செய்ய வல்லவன். ஆதலாலும் எல்லாவற்றையும் தோற்றி, இருத்தி, மறைக்கும் இவனுக்குத் தோற்றமும் இல்லை, மறைவும் இல்லை ஆதலாலும் இவனைச் சித்தன் என்றார். ஈறில்லா என்று கூறியமையின் ஆதி இல்லா என்பதும்பெற்றாம். பாடலின் மூன்றாவது அடி இறைவனுக்கே உரிய ஒரு தனி இலக்கணத்தை வகுக்கின்றது. பித்தர் செயலுக்கு யாரும் காரண காரியம் கூறமுடியாது. அதேபோன்று படைத்தல் முதலிய செயல்களை எவ்விதக் காரணமுமின்றி விளையாட்டாகச் செய்பவன் ஆதலின்'பித்தனே' என்றார். எந்த ஒரு பொருளும் ஒன்றுடன் இணைந்து உள்ளது என்றால், அதிலிருந்து பிரிந்து நிற்றல் இயலாத காரியம் ஒன்று எதனுடனாவது இணைந்திருக்க வேண்டும்; அல்லது பிரிந்திருக்கவேண்டும். இறைவன்மட்டும் இந்த விதிக்கு விலக்காவான். அதனையே அடிகளார் ‘எல்லா உயிருமாய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லையாய் நிற்கும் எத்தனே' என்றார். உயிர்களாய் நிற்கும்போது அவன் கலந்து நிற்றலால் அந்த உயிர் தழைத்து நிற்கின்றது. அவற்றிலிருந்து பிரிந்து தனியே நிற்கும்போது உயிர்கள்மாட்டு அவன் இல்லாமல் போய்விடுகிறானோ என்று நினைக்கத் தேவையில்லை. இறைவனைப் பொறுத்தமட்டில் ஒரே நேரத்தில் உயிருடன் தழைத்து நின்று, அதே நேரத்தில் அதிலிருந்து வேறுபட்டுத் தனியனாகவும் உள்ளான். இதுதுான் அவன் இருக்குமிடம் என்று எந்த ஒரு பொருளையும் குறித்துச் சொல்ல முடியாதபடி எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் வேறாயும்,